BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பகீர் சம்பவம்... டியூசன் சென்று திரும்பிய மாணவனை கடத்திய மர்ம கும்பல்... காவல்துறை விசாரணை.!
சென்னையில் டியூசன் சென்று திரும்பிய ஐந்தாம் வகுப்பு மாணவனை கேரளாவிற்கு ரயிலில் கடத்த இருந்த சதி முறியடிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மீட்கப்பட்ட மாணவனிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. அந்த ரயிலின் ஏசி பெட்டியில் டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டிருந்தபோதே 11 வயது சிறுவன் அழுது கொண்டே இருந்திருக்கிறான். அந்த சிறுவனை அழைத்து டிக்கெட் பரிசோதகர் விசாரித்ததில் தன்னை இரண்டு பேர் இந்த ரயில் பெட்டியில் ஏற்றி விட்டு சென்றதாக பயந்து கொண்டே கூறி இருக்கிறான்.

இதனைத் தொடர்ந்து சிறுவனை சமாதானப்படுத்திய டிக்கெட் பரிசோதகர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ரயில் நின்ற போது பிளாட்பாரத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த இரண்டு அதிகாரிகளிடம் அவனை ஒப்படைத்தார். இது தொடர்பாக சிறுவனிடம் ரயில்வே போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் பேசிய சிறுவன் தான் சென்னையை சேர்ந்தவன் என்றும் அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படிப்பதாகவும் தெரிவித்துள்ளான். மேலும் டியூஷன் சென்று விட்டு வீடு திரும்பிய போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தன்னை கடத்திச் சென்று ரயிலில் ஏற்றி விட்டதாக தெரிவித்திருக்கிறான். இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோரை அழைத்த போலீஸ் அதிகாரிகள் சிறுவனை அவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.