இதென்ன நியாயம்... கடன் தொகை செலுத்த தவறியவரின் மகளை கடத்திச் சென்ற நிதி நிறுவன ஊழியர் கைது.!shock-in-pudukottaithe-employee-of-the-financial-instit

கடன் தொகை  செலுத்தாதவரின் 11 வயது மகளை நிதி நிறுவன ஊழியர் கடத்தி சென்ற சம்பவம்  பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே மருதூரைச் சோந்தவா் கூலித் தொழிலாளி வனத்துராஜா. இவா் அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி மாத தவணையாக 2500 ரூபாய் செலுத்தி வந்தார். இந்நிலையில் ஜூன் மாத தவணை செலுத்தவில்லை என்று தெரிகிறது.

tamilnadu

இதனைத் தொடர்ந்து கடன் வசூலிக்க வீட்டிற்கு வந்தபோது வனத்துராஜா வீட்டில் இல்லாததால்  கடன் வசூலிக்க வந்தவர் அவரது 11 வயது மகளை அலுவலகத்திற்கு கடத்திச் சென்றார். மேலும் அலுவலகத்திலிருந்து போன் செய்து  பணத்தை கொடுத்து விட்டு மகளை கூட்டிச் செல் என தெரிவித்திருக்கிறார்.

tamilnadu

இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த வனத்து ராஜா இது தொடர்பாக கீரனூர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார். இச்சம்பவத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் நிதி நிறுவன ஊழியர்  விக்னேஷ் என்பவரை கைது செய்து  சிறுமியை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.