
ஏ.சி யூனிட் வெடித்து பரிதாபம்.. வடமாநில இளைஞர் படுகாயம்.!
ஏசி அவுட்டோர் யூனிட் வெடித்ததில் வடமாநில இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பகத்சிங் நகர் பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரி. இவர் தனது வீட்டிலேயே மெஸ் ஒன்றை நடத்தி வரும் நிலையில், அங்கு ராம்குமார் என்ற வடமாநில இளைஞர் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தன்னுடைய வேலைகளை முடித்து விட்டு வழக்கம்போல இளைஞர் நேற்றிரவு மாடியில் தூங்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஏசியின் அவுட்டோர் யூனிட்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.
இதனை கண்ட ராம்குமார் அதனருகில் சென்று பார்த்த நிலையில், அது திடீரென வெடித்துள்ளது. இதனால் ராம்குமாரின் முகம், கை மற்றும் கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிய வர, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை செய்ததில், மின் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement