
Seeman supports surya on education
கடந்த சனிக்கிழமை அகரம் அறக்கட்டளையின் சார்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்தியாவில் நிகழும் கல்வி கொள்கையை குறித்து மிகவும் ஆவேசமாக பேசினார் நடிகர் சூர்யா.
அன்று பேசிய சூர்யா தமிழகத்தில் தற்போது நிலவிவரும் கல்வி முறைகளைப் பற்றியும் அரசு பள்ளிகளில் நிலைகளைப் பற்றியும் புட்டுப்புட்டு வைத்தார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா கல்வியில் செய்யும் புரட்சிக்கு அடித்தளமே நாம் தமிழர் கட்சி தான் என சீமான் தெரிவித்துள்ளார். கல்வி விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக நாங்கள் மேடைகளில் பேசிய கருத்துகளையே தம்பி சூர்யா பிரதிபலிப்பதாக சீமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கல்வி என்பது மக்களுக்கான மகத்தான சேவை. அதனை விற்பனைப்பண்டமாக மாற்றி, வணிகமாக்கிப் பொருளீட்ட எந்நாளும் அனுமதிக்கக் கூடாது என நாங்கள் பல்வேறு மேடைகளில் எப்பொழுதும் முன்வைத்துக் கொண்டிருக்கும் கருத்துகளையே தம்பி சூர்யா பிரதிபலித்திருக்கிறார். pic.twitter.com/oYSNkoJi6Y
— சீமான் (@SeemanOfficial) July 16, 2019
Advertisement
Advertisement