கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
தமிழக அரசியலில் பேரதிர்ச்சி.. சவுக்கு சங்கர் - சீமான் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு பேட்டி..!

சமூக வலைத்தளத்தில் தன்னை அரசியல் விமர்சகராக அறிமுகப்படுத்தி பயணித்து வந்தவர் சவுக்கு சங்கர். இவர் முன்னாள் காவல்துறை உளவுப்பிரிவில் பணியாற்றி வந்தவர் ஆவார். இவர் அரசியல் கட்சிகளின் ஆட்சிக்கு எதிராக பல கருத்துக்களை பதிவு செய்து, இறுதியாக நீதிபதிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, பலகட்ட சட்டப்போராட்டங்களுக்கு பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று சவுக்கு சங்கர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்துக்கொண்டனர். அப்போது தான் தம்பி சங்கருக்கு ஆதரவாக இருப்பதாக சீமான் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில், "சங்கர் தனிநபர் அல்ல. அவர் மாபெரும் இயக்கம். அவருக்கு பின்னால் தமிழகமே இருக்கிறது. சங்கரின் ஆட்டோகிராஃபை தமிழ்நாடு விரும்புகிறது. அவரின் மீதான வழக்கு தளர்ந்ததற்கு நன்றி. உங்களால் என்ன மாறுதல் நடந்தது?. உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கர் வேட்பாளராக களமிறங்கினாலும் நாம் தமிழரின் விவசாயி சின்னத்தில் போட்டியிட அனுமதிப்பேன்.
அதிமுக - திமுக எதிரெதிக ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது, ராகவா லாரன்ஸின் படத்தில் உள்ளதை போல பேய்க்கும் - பேய்க்கும் சண்டை என்ற வசனத்தை போலத்தான். ஊழலுக்கும் - ஊழலுக்கும் சண்டை நடக்கிறது. அதை ஊரே வேடிக்கை பார்க்கிறது. உங்களின் மீது கேள்வி கேட்க ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தகுதி உள்ளன.
நாங்கள் பாஜக ஆட்கள் இல்லை. நாங்கள் தனி. திமுக தான் பாஜக. அதிகாரத்தில் இல்லாதபோது திமுக GoBack Modi என்று கூறியது. இன்று அதிகாரத்திற்கு வந்ததும் வெண்ணிற குடையை எடுத்து செல்கிறார்கள். மஞ்சள், கருப்பு, சிவப்பு என பிற நிற குடைகள் கிடைக்கவில்லையா?. பாஜகவுக்கு திமுக அப்பட்டமாக ஆதரவு அளிக்கிறது. நாங்கள் இருவரும் தமிழ் மக்களையும், மண்ணையும் நேசிக்கிறோம். எங்கள் இருவருக்கும் அடக்குமுறையை எதிர்க்கும் பழக்கம் உண்டு" என்று தெரிவித்தார்.