ஐயோ.. வயிறு வலிக்குது! நடுரோட்டில் துடித்த பள்ளி மாணவி... உடனே ஓடு வந்து பெண்ணின் உதவியோடு வாலிபர் செய்த அந்த ஒரு காரியம்! நெகிழ்ச்சி வீடியோ.!!!
பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவர், திடீரென ஏற்பட்ட கடுமையான வயிற்று வலியால் சாலையோரம் அமர்ந்து தவித்துள்ளார். இதைப் பார்த்த பெண் ஒருவர் உடனடியாக உதவிக்கு வந்துள்ளார். அப்போது அவ்வழியாகச் சென்ற சிறுவனும் மாணவிக்கு உதவ முன்வந்துள்ளார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
சாலையோரம் வலியால் தவித்த மாணவி
பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நடக்க முடியாததால் சாலையோரம் அமர்ந்துள்ளார். அவரது நிலையைப் பார்த்த பெண் ஒருவர் அருகில் சென்று உதவியுள்ளார். அப்போது அங்கு வந்த சிறுவனும் அந்தப் பெண்ணுடன் சேர்ந்து மாணவிக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்துள்ளார்.
மற்றொரு மாணவியை அழைத்து வந்த சிறுவன்
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவிக்கு மேலும் உதவி தேவைப்படுவதை உணர்ந்த சிறுவன், அருகில் இருந்த மற்றொரு பள்ளி மாணவியை அழைத்துள்ளார். உடனே அங்கு வந்த அந்த மாணவி, வயிற்று வலியால் தவித்த சிறுமியின் நிலையைப் புரிந்துகொண்டு அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளார். அறிமுகமில்லாத மாணவிக்கு உதவுவதில் இருவரும் காட்டிய அக்கறை பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற வீடியோ
இந்தக் காட்சிகள் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளன. குறிப்பாக, சிறுமிக்கு உதவிய சிறுவன், மற்றொரு மாணவியின் உதவியையும் நாடிய விதம் பலரது பாராட்டைப் பெறும் வகையில் அமைந்துள்ளது. அவசர நேரத்தில் பிறருக்கு உதவ முன்வருவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த வீடியோ உள்ளது.
स्कूल से छुट्टी होने के बाद लड़की अपने घर को जाने लगती रास्ते में उसके पेट में दर्द होता है।
तभी लड़की को असहाय देखकर एक महिला उसके पास आ जाती है,साथ ही एक लड़का आकार रुकता है महिला
लड़की को पानी पिलाती है।
फिर लड़का एक अन्य लड़की को बुलाता है,वह लड़की तुरंत समझ...Real news https://t.co/gfO9Bs9fwf
— Santoshi Pal (@Santoshi_P_) November 8, 2026