அறிவியல் டீச்சருக்கு காதல் கணக்கு போட்ட கணித ஆசிரியர்.! இறுதியில் நடந்த பகீர் சம்பவம்.!

அறிவியல் டீச்சருக்கு காதல் கணக்கு போட்ட கணித ஆசிரியர்.! இறுதியில் நடந்த பகீர் சம்பவம்.!


school teacher murdered

திருப்பத்தூர் மாவட்டம் ராமகிருஷ்ணாபுரத்தில் தலை நசுங்கிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்தவர் ஊத்தங்கரை ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் சிவக்குமார் என்பதும், அவரை மர்ம கும்பல் கடத்திச் சென்று கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்த சிவக்குமாருக்கும் அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் லட்சுமி என்பவருடன் காதல் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் பல இடங்களில் உல்லாசமாக சுற்றித்திரிந்து உள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த லட்சுமியின் காதல் கணவர் இளங்கோ, சிவக்குமாரை சந்தித்து எச்சரித்துள்ளார். ஆனாலும் சிவக்குமார் லட்சுமியுடனான தொடர்பை விடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இளங்கோ, கூலிப்படை கும்பலை வைத்து தாக்குவதற்கு திட்டம் தீட்டியுள்ளார்.

School teacher

இதனையடுத்து ஆசிரியர் சிவக்குமார் மோட்டார்சைக்கிளில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த கூலிப்படை காரில் கடத்தி ராமகிருஷ்ணாபுரம் பகுதிக்கு கொண்டு சென்று லாரியை விட்டு ஏற்றி கொலை செய்துள்ளனர். இதில் அந்த இடத்திலேயே அவர் இறந்தார். அதன்பின் கூலிப்படையினர் தப்பியோடிவிட்டனர்.

இதனையடுத்து ஆசிரியர் சிவக்குமார் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்த போது அவர் ஆசிரியை லட்சுமி மட்டுமல்லாமல் மேலும் 5 பெண்களுடன் தொடர்பில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  ஊத்தங்கரை பகுதியை 8 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.