இது ஒரு குத்தமா.!! குளித்துக்கொண்டிருந்த ஆசிரியருக்கு அறிவுரை கூறிய சமையல்காரர்..!! அடுத்து நடந்த பகீர் சம்பவம்..
இது ஒரு குத்தமா.!! குளித்துக்கொண்டிருந்த ஆசிரியருக்கு அறிவுரை கூறிய சமையல்காரர்..!! அடுத்து நடந்த பகீர் சம்பவம்..

கொஞ்சம் நாகரீகமாக குளிங்க என கூறியதால் விடுதி சமையல் காரரின் பைக்கை ஆசிரியர் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அரசு மாணவர் விடுதி ஒன்றில் செல்வ தேவேந்திரன் என்பவர் சமையல் வேலை பார்த்துவந்துள்ளார். அதே விடுதியில் அரசு பள்ளி ஆசிரியர் சுரேஷ் என்பவரும் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் பொது வெளியில் இருக்கும் அரசு விடுதியின் குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டிருந்த ஆசிரியர் சுரேஷ், சற்று அநாகரிகமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த செல்வ தேவேந்திரன், ஆரியரிடம் சென்று சற்று நாகரீகமாக குளிக்கும்படி கூறியுள்ளார். இதனால் ஆசிரியர் - செல்வ தேவேந்திரன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாற, பயந்து போன செல்வ தேவேந்திரன் விடுதி அறையின் உட்புறமாக பூட்டிக்கொண்டார்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் சுரேஷ், விடுதியின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமையல்காரர் செல்வ தேவேந்திரன்தின் இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்து, அதில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக செல்வ தேவேந்திரன் போலீசாரிடம் கொடுத்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அரசு பள்ளி ஆசிரியர் சுரேஷ், மற்றும் அவருக்கு உதவி புரிந்த ராஜா ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.