பள்ளிச்சீறுடையில் இருக்கும் மாணவி..! அப்படியே வைத்து தாலிகட்டிய மாணவன்..! வைரல் வீடியோ.!

பள்ளிச்சீறுடையில் இருக்கும் மாணவி..! அப்படியே வைத்து தாலிகட்டிய மாணவன்..! வைரல் வீடியோ.!


school-student-marriage-at-uniform-video-goes-viral

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் அதே நேரத்தில் தங்கள் பிள்ளைகள் நன்கு படித்து, நம்மை காப்பாற்றுவார்கள் என நம்பி அவர்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு, ஒருசில பிள்ளைகள் செய்யும் செயல்கள் பெரும் ஏமாற்றதை தருகிறது.

இந்நிலையில், பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு, சீருடையில் இருக்கும் மாணவன் ஒருவன் தாலி காட்டுவதும், அந்த தாலியை வெட்கப்பட்டு, தலை குனிந்து அந்த பெண் ஏற்றுக்கொள்வதும் வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

நெல்லை களக்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் நடந்ததாக கூறப்படும் இந்த காட்சியானது மொத்தமே 22 வினாடிகள் தான் ஓடுகிறது. பள்ளிக்கூடத்தில் குழந்தைகளை படிக்க அனுப்பும் பெற்றோருக்கு இப்படியான சம்பவங்கள் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவ்விவகாரத்தை கையில் எடுத்து குழந்தைகள் நல அமைப்பும் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.