தமிழகம்

சூப்பர் சார்!! அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 பணம்!! அசத்தும் தலைமை ஆசிரியர்..

Summary:

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் கொடுத்து அசதி வருகிறார் அரசு பள்ளி தலைமை ஆ

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் கொடுத்து அசதி வருகிறார் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது படிக்காசுவைத்தான் பட்டி. இந்த ஊரில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டுக்கான 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது.

இந்த பள்ளியில் 1 ஆம் வகுப்பில் சேரும் அனைவர்க்கும் 1000 ரூபாய் பரிசு வழங்கி அசத்தி வருகிறார் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார். கடந்த ஆண்டு 1 ஆம் வகுப்பில் சேர்ந்தவர்களுக்கு செல்போன் கொடுத்து அசத்திய அவர், இந்த ஆண்டு 1000 ரூபாய் பணம் கொடுத்து அசத்திவருகிறார்.

இதுகுறித்து பேசியுள்ள தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், "அரசு பள்ளியில் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு, அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அரசு பல்வேறு சலுகைகள் வழங்கிவந்தாலும் கூட, அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக, தன்னால் முடிந்ததை செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்".

தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரின் இந்த முயற்சிக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement