காணாமல் போன மகளை தேடி சென்ற பெற்றோர்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி! நெஞ்சை உலுக்கும் சம்பவம்.School girl murdered in thirunelveli district

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே உள்ள கூட்டப்பனை என்னும் கிராமத்தை சேர்ந்தவர்கள் லிவிங்ஸ்ட்டன் - வினிட்டா தம்பதியினர். இவர்களது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7 ஆம் வகுப்பு படித்துவந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாணவி மாயமாகியுள்ளார்.

தனது மகளை எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் இதுகுறித்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து நடந்த தேடுதலில் அதே பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் அரைநிர்வாண நிலையில் மாணவி சடலமாக கிடந்துள்ளார்.

Crime

மாணவியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொல்லப்பட்டாரா என போலீசார் விசாரித்துவருகின்றனர்.