தமிழகம்

பெயர் அட்சயா!! 15 வயசுதான் ஆகுது!! இந்த வயசுல இப்படி ஒரு கொடூர மரணம் தேவையா!! பெற்றோர்களே உஷார்!!

Summary:

சாலை விபத்தில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள

சாலை விபத்தில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரை அடுத்த சு.பள்ளிபட்டு மின்நகர் என்ற பகுதியில் வசித்துவருபவர் தண்டபாணி (37). கூலி தொழிலாளியான இவருக்கு 15 வயதில் அட்சயா என்ற மகள் உள்ளார். அட்சயா அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்துவந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அட்சயா தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார்.

பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த அட்சயா, திருப்பத்தூர் ரெயில்வே மேம்பாலம் அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி அவர் மீது மோதியது.

இதில் லாரி சக்கரத்தில் சிக்கி அட்சயா அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று அட்சயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த சுதாகர் (49) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பள்ளி மாணவி ஒருவர் சாலை விபத்தில் கொடூரமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement