ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளும் தனுஷின் 'கேப்டன் மில்லர்'.!
என்னை விட்டுவிடுங்கள் அண்ணா.. எனக்கு மாதவிடாய் காலம் என கெஞ்சிய பள்ளி மாணவி!. காமக்கொடூரர்களின் வெறிச்செயல்!.
என்னை விட்டுவிடுங்கள் அண்ணா.. எனக்கு மாதவிடாய் காலம் என கெஞ்சிய பள்ளி மாணவி!. காமக்கொடூரர்களின் வெறிச்செயல்!.

தருமபுரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி காட்டுக்குள் வைத்து 2 வாலிபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆம் தேதி அந்த மாணவி இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுக்குள் சென்ற இவரை, அதே ஊரை சேர்ந்த ரமேஷ் - சதீஷ் ஆகிய இரண்டு பேரும் வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
தன்னைக் காத்துக் கொள்ள மாணவி நடத்திய போராட்டத்தில் ஆத்திரமடைந்த கொடூரர்கள் மாணவியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
மாலையில் மகளை அழைத்துக்கொண்டு கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளனர். ஆனால் காவல்துறையினர் புகாரை பெற மறுத்துள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற பிறகே இரவு 12 மணிக்கு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த நிலையிலும் மருத்துவமனைக்கு அனுப்பாமல் இரண்டு தினங்கள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். பின்னர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவியை சாதாரண பிரிவில் சேர்த்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் மாணவி உயிரிழந்தார்.
இதனையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து மாணவி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் அண்ணன் முறையாவார்கள். அவர்கள் இருவரும் என்னை காட்டுக்குள் வைத்து மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர், ஒருவர் என்னை பிடித்துக்கொள்ள மற்றொருவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.
அண்ணா என்னை விட்டுவிடுங்கள்.. எனக்கு மாதவிடாய் காலம், என்னை விட்டுவிடுங்கள் என அவர்களிடம் கதறியும் கேட்கவில்லை என அவர் அளித்துள்ள வாக்குமூலம் அனைவரையும் பதறவைத்துள்ளது.