"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
ஒரே ஒரு சுருக்குக்காக காத்திருக்கும் ஒட்டுமொத்த தமிழகம்! சுஜித்தை மீட்க தீவிர முயற்சி.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை அடுத்து உள்ள நடுகாட்டுப்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளியான ஆரோக்கிய தாஸ் - மேரி இவர்களின் இரண்டு வயது மகன் சுஜித் வீட்டின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
நேற்று மாலை 5.45 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து கடந்த 8 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப்பணிகள் அதிதீவிரமாக நடந்துவருகிறது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கொண்டுவந்த கருவியின் மூலம் குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இதன் முதல் கட்டமாக குழந்தையின் ஒரு கையில் சுருக்கு போடப்பட்டுள்ள நிலையில் மற்றொரு கையில் சுருக்கு போடும் முயற்சி பலமணிநேரமாக நடந்துவருகிறது. இரண்டாவது கையிலும் சுருக்கு போடப்பட்ட நிலையில் மேல தூக்கும்போது சுருக்கு நழுவியது.
இந்நிலையில் மீண்டும் மற்றொரு கையில் சுருக்கு போட மீட்பு குழுவினர் போராடிவருகின்றனர். அந்த ஒரு சுருக்கை போட்டுவிட்டால் குழந்தையை பத்திரமாக மீட்டுவிடலாம் என மீட்பு குழுவினர் கூறிவரும் நிலையில் அந்த ஒரு சுருக்கிற்காக ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கிறது.