சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறாரா.? உச்சகட்ட குஷியில் அ.ம.மு.க-வினர்.!

சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறாரா.? உச்சகட்ட குஷியில் அ.ம.மு.க-வினர்.!


sasikala-release-soon

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என கூறப்பட்டு வந்தது. அவர் வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னர் எப்படியும் வெளியே வந்து விடுவார் என்ற காரணத்தால், அவரது வருகை தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அபராதத் தொகையை செலுத்த அனுமதிக்க கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்தநிலையில், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் இன்னும் ஒருவாரத்தில் சசிகலா வெளிவருவதற்கான வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. 

sasikala

கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி, அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். அந்தவகையில் சசிகலா 43 மாத காலம் சிறைதண்டனையை முடித்துள்ளார், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் ஒருவாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் என குறிப்பிட்டுள்ளார்.