தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
சசிகலாவை வரவேற்க ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்த வீரத்தமிழர்கள்.!

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா, நேற்று காலை கார் மூலம் சசிகலா சென்னை புறப்பட்டு வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு சசிகலாவின் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தடையை மீறி 100க்கும் மேற்பட்ட கார்கஓள் சசிகலாவின் காரை பின் தொடர்ந்தது. செல்பி, சாமி தரிசனம், ட்ரோன் வரவேற்பு, பேனர், பட்டாசு, ஆரத்தி என அமமுமவினர் சசிகலாவின் வருகையை திருவிழா போல கொண்டாடினர்.
ஓசூரில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் சசிகலா அதிமுக துண்டு அணிந்தபடி சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து சசிகலா தமிழகம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது ஜல்லிக்கட்டு காளையுடன் காத்திருந்த காளையர்கள் மற்றும் விவசாயிகள் சாலையில் நின்று வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து சசிகலா 23 மணி நேர பயணத்திற்கு பிறகு இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடம், ஜானகி அம்மாள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.