தண்ணீர் கேன் விற்பது போல சாராய விற்பனை.! புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சூடுபிடித்த வியாபாரம்.!

தண்ணீர் கேன் விற்பது போல சாராய விற்பனை.! புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சூடுபிடித்த வியாபாரம்.!


sarayam sale in pudukkottai

கொரோனா தொற்றின் 2வது அலை தற்போது நாடு முழுவதும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் அரசு டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக்கொண்டு தற்போது கள்ளச்சந்தையில் பல இடங்களில் மது விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கருக்காகுறிச்சி பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கருக்காகுறிச்சி தெற்கு தெரு காத்தாயி அம்மன் கோவில் அருகே எரிசாராயத்தை தண்ணீர் பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த அஜித் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

sarayam

இதேபோல், சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் தண்ணீர்கேன் விற்பது போல மதுபாட்டில்களை விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது முழு ஊரடங்கையொட்டி அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், இது போல கள்ளத்தனமாக மது பாட்டில்களை சிலர் விற்பனை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.