பாதி விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஆட்டுக்கறி..! சோதனை செய்ததில் தெரியவந்த அதிர்ச்சி உண்மை..!

சேலம் மாவட்டத்தில் ஆட்டுக்கறி பாதி விலைக்கு விற்பனை செய்யப்பட்டதும், அந்த கறியை சோதனை செய்ததில் நோய்வாய்ப்பட்டு இறந்துபோன ஆடுகளின் கறியை விற்பனை செய்யப்பட்டதும் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் ஆட்டுக்கறி 700 ரூபாய் விற்கப்படும் நிலையில், சேலத்தில் உள்ள பால்பண்ணை, கொல்லப்பட்டி, இரும்பாலை பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் ஆட்டுக்கறி வெறும் 350 ரூபாய்க்கு விற்கப்படுவதால் சந்தேகமடைந்த சிலர் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை அடுத்து அந்த பகுதிகளில் உள்ள 8 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், குளிர்சாதனப்பெட்டியில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி, நோய்வாய்ப்பட்டு இறந்த ஆடுகளின் இறைச்சியை பாதிவிலைக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் இருந்த ஆடுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், சுகாதாரமற்ற முறையில் ஆட்டு இறைச்சியை தொடர்ந்து விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களை எச்சரித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.