பழிக்கு பழியாக நடந்த பயங்கரம்; கார் ஏற்றி மளிகைக்கடை உரிமையாளர் கொடூர கொலை.!

பழிக்கு பழியாக நடந்த பயங்கரம்; கார் ஏற்றி மளிகைக்கடை உரிமையாளர் கொடூர கொலை.!


Salem Grocery Shop Owner Killed Revenge 

 

சேலம் நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் வேம்படித்துறை. இவர் சம்பவத்தன்று தனது உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக வன்னிமாநகரம் வந்துள்ளார். 

இறுதிச்சடங்கு நிறைவு பெற்றதும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், எதிர்திசையில் வந்திய கார் - இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. 

விபத்தாக இருக்கலாம் என சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் மீட்கச்செல்ல, காரில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் உயிரிழந்த வேம்படித்துறையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு நடத்திய விசாரணையில், கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவகுரு என்பவரின் கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்து கைது செய்யப்பட்ட வேம்படித்துறை, பழிவாங்கும் பொருட்டு சிவகுருவின் ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டது உறுதியானது. தற்போது சிவகுருவின் ஆதரவாளர்களுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.