தமிழகம்

தமிழகத்தையே அதிரவைத்த சிறுமியின் கொலை.. தலையை துண்டித்த காமுகனுக்கு தூக்கு.. போக்சோ நீதிமன்றம் அதிரடி.!

Summary:

தமிழகத்தையே அதிரவைத்த சிறுமியின் கொலை.. தலையை துண்டித்த காமுகனுக்கு தூக்கு.. போக்சோ நீதிமன்றம் அதிரடி.!

சிறுமி பாலியல் சீண்டலை எதிர்த்ததால், அவரது தலையை துண்டித்து கொலை செய்த காமுகனுக்கு சேலம் போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் ஒரு சிறுமி பூ கட்டுவதற்காக தினேஷ் குமார் என்பவரிடம் நூல் கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுமியை கண்ட தினேஷ்குமார், அவரை அடைய வேண்டும் என்ற ஒரு அற்ப எண்ணத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால், சிறுமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சிறுமியை தினேஷ்குமார் சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், இதுகுறித்து சிறுமி வெளியே கூறி விடக்கூடாது என எண்ணி சிறுமியின் தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது தினேஷ்குமார் தான் சிறுமியை கொன்றது என்பது தெரியவந்துள்ளது. எனவே, அவரை கொலை மற்றும் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த வழக்கை விசாரித்த சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி முருகானந்தம், சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்தது மற்றும் கொலை செய்தது போன்ற குற்றத்திற்காக தினேஷ் குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.


Advertisement