#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
அரசு மருத்துவமனை காவலாளி Vs நோயாளியின் உறவினர்.. நாக்கூசும் வார்த்தையால் நடந்த வாதம்.!

சேலம் மாவட்ட அரசு மருத்துவமனையில், காவலாளி ஒருவர் அவதூறாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை, பல நோயாளிகள் சிகிச்சை பெரும் இடமாக இருக்கிறது. இதனிடையே, அரசு மருத்துவமனை வளாகத்தில், காவலாளி ஒருவர், நோயாளியின் உறவினரை ஆவேசத்தில் கண்டிக்கும் காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் பேசும் காவலாளியும், அவருடன் வாதம் செய்யும் நோயாளியின் உறவினரும் பலத்த வாக்குவாதம் செய்கின்றனர். ஒருகட்டத்தில் ஆவேசமான காவலாளி அவதூறான வார்த்தைகளை உரக்க பேசியதால், அங்கு லேசான பதற்ற சூழல் நிலவுகிறது. மேலும், நோயாளியின் உறவினரை அங்கிருந்த பிறரும் வெளியே செல்ல அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: மாணவியிடம் ஆபாச பேச்சு; தற்காலிக ஆசிரியரை வீட்டுக்கு அனுப்பிய பள்ளிக்கல்வித்துறை.. கைது நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம்.!
சேலம் அரசு மருத்துவ மனையில் வாட்ச்மேனாக பணி அமர்த்தப்பட்ட ரவுடியின் அராஜகம்! காதில் கேட்க கூடாத வார்த்தைகள் இவனை வேலையை விட்டு தூக்கும் வரை பரப்புங்கள் pic.twitter.com/i4CMT8edKf
— 𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 (@im_inba1) February 6, 2025
பழைய வீடியோ மீண்டும் வைரல்:
இந்த விடியோவை தற்போது பதிவு செய்துள்ள ஒரு நபர், அரசின் மீது குற்றசாட்டை முன்வைத்து இருக்கிறார். ஆனால், உண்மையில் இந்த வீடியோ கடந்த 2019ம் ஆண்டு எடுக்கப்பட்டது ஆகும். இந்த விடியோவை தற்போது மீண்டும் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். மேலும், மேற்படி காவலாளி அப்போதே துறைரீதியிலான நடவடிக்கையையும் எதிர்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு அவதூறு பரப்பும் நோக்கத்துடன், சில நபர்கள் இவ்வாறான செயல்களை மேற்கொள்வதாக ஆளுங்கட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தனியார் செய்தி நிறுவன அலுவலக கட்டிடத்தில் பகீர்.. ஊழியர் தற்கொலை.. காரணம் என்ன?