மாணவியிடம் ஆபாச பேச்சு; தற்காலிக ஆசிரியரை வீட்டுக்கு அனுப்பிய பள்ளிக்கல்வித்துறை.. கைது நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம்.!



in Salem Vazhapadi Minor Girl Harassed by Teacher 


சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி, தும்பல் பகுதியில் 17 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசுபல்லயில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த ஜன.13ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு பெற்றோருடன் ஜவுளிக்கடைக்கு சென்றுள்ளார். 

துணி எடுத்துவிட்டு வந்தபோது, அங்கு இருந்த நெய்யமலை அரசுப்பள்ளி தற்காலிக ஆசிரியர் ராஜ்குமார் (வயது 28), மாணவியிடம் ஆபாசமாக பேசி இருக்கிறார். இதனால் மாணவி ஆசிரியரை கண்டித்து, பெற்றோருடன் புறப்பட்டு சென்றார். 

Salem

காவல்துறை விசாரணை

கடந்த ஜன.29 அன்று ராஜ்குமார் மாணவி பயின்று வரும் பள்ளிக்கு வேறொரு வேலை தொடர்பாக வந்துள்ளார்.  அப்போது, மாணவி ஆசிரியரை அடையாளம் கண்டு, வேறொரு ஆசிரியரிடம் கூறியுள்ளார். அவர் மாணவியை சம்பந்தம் செய்து இருக்கிறார். இதுகுறித்து பின் மாணவி பெற்றோரிடம் கூறவே, அவர்கள் பள்ளிக்கு சென்று முறையிட்டு, வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையும் படிங்க: தனியார் செய்தி நிறுவன அலுவலக கட்டிடத்தில் பகீர்.. ஊழியர் தற்கொலை.. காரணம் என்ன?

புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்காலிக ஆசிரியரை மாவட்ட கல்வி அலுவலர் பணிநீக்கம் செய்ய பள்ளி மேலாண்மை குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அவர் பணிநீக்கமானது செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் காவல் துறையினரும் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: சேலம்: எருது விடும் விழாவில் பட்டாசு வெடித்ததால் விபரீதம்; முட்டிதூக்கிய காளைகள்., 20 பேர் காயம்.!