சேலம்: எருது விடும் விழாவில் பட்டாசு வெடித்ததால் விபரீதம்; முட்டிதூக்கிய காளைகள்., 20 பேர் காயம்.!



  in Salem Tharamangalam 20 Injured Bull Festival 

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம், ரெட்டிபட்டி கிராமத்தில் கெடாரியம்மன் கோவில் உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில் திருவிழாவுடன் எருது விடும் விழா நடைபெற்றது. 

உரிய அனுமதி இன்றி நடைபெற்ற எருதுவிடும் விழாவில், 5 க்கும் மேற்பட்ட காளைகள் ஒரே நேரத்தில் கயிறு கட்டி அவிழ்த்து வரப்பட்டன.

பட்டாசு வெடித்தனர்

அப்போது, சிலர் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மிரண்டுபோன காளைகள் திடீரென கூட்டத்திற்குள் புகுந்தது.

எருது விடும் விழா

20 பேர் காயம்

இந்த சம்பவத்தில் குழந்தைகள், மூதாட்டி, இளைஞர்கள் என 20 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். 

இதையும் படிங்க: கருணை வேலை வேணுமா? ஆசைக்கு இணங்கு - அரசு அதிகாரியின் அதிர்ச்சி செயல்., அதிரடி கைது.!

பாதிக்கபட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் தற்போது விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க: மகனை இரும்பு கம்பியால் அடித்தே கொன்ற தந்தை; சேலத்தில் பரபரப்பு சம்பவம்.. காரணம் என்ன?