தனியார் செய்தி நிறுவன அலுவலக கட்டிடத்தில் பகீர்.. ஊழியர் தற்கொலை.. காரணம் என்ன?



in Salem Private NewS Channel Car Driver Dies by SUicide 

 

சென்னையில் உள்ள எண்ணூர், சத்தியவானி முத்து நகரில் வசித்து வருபவர் குமார் (வயது 27). இவர் சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் செய்தி தொலைக்காட்சி கட்டிடத்தின், மூன்றாவது மாடியில் தங்கியிருந்தவாறு கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். 

நேற்று காலை சுமார் 10 மணியளவில், குமார் தற்கொலை செய்துகொண்டதாக அழகாபுரம் காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், உதவி ஆணையர் அஸ்வினி தலைமையிலான அதிகாரிகள், நிகழ்விடத்திற்கு விரைந்து ஆய்வு செய்தனர். அப்போது, துணியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட குமாரின் உடல் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

இதையும் படிங்க: சேலம்: எருது விடும் விழாவில் பட்டாசு வெடித்ததால் விபரீதம்; முட்டிதூக்கிய காளைகள்., 20 பேர் காயம்.!

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியதால் சோகம்

மேலும், குமாரின் கடிதம், அவர் பதிவு செய்த வைத்த வீடியோ குறித்த தகவல் காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதனை கைப்பற்றிய அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் அளித்துள்ள விளக்கத்தில், "குமார் 2 ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக குமார் இயக்கிச் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது.

Salem

விபத்தில் சிக்கிய கார்

இதனால் குமார் பணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சேலத்தில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் வேலை பார்க்க தெரிவித்துள்ளனர். இதனால் சேலத்தில் 6 மாதமாக தங்கி இருந்து பணியாற்றி வருகிறார். கடந்த ஜன.16 அன்று ஆத்தூரில் இருக்கும் உறவினரை பார்க்க, அலுவலக காரை எடுத்துச் சென்றபோது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் காரை சர்விஸ் சென்டருக்கு கொண்டு சென்றபோது, காருக்கு காப்பீட்டு காலாவதியாகியுள்ளது தெரியவந்தது. மேலும், காரை சீரமைக்க இலட்சக்கணக்கில் செலவாகும் என பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த விஷயம் குறித்த தகவல் சென்னை அலுவலகத்திற்கு தெரியவரவே, காரை பழுதுநீக்கம் செய்துவிட்டு, பணியில் இருந்து நின்றுவிடுமாறு குமாரிடம் கூறப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்துபோனவர் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. அவரின் உடலில் இருந்து இரத்தம் வெளியேறி, ஸ்பேனரும் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தது.

இதனால் குமார் தற்கொலை செய்துகொண்டாரா? எப்படி தற்கொலை செய்துகொண்டார்? என விசாரணை நடக்கிறது. 

இதையும் படிங்க: கருணை வேலை வேணுமா? ஆசைக்கு இணங்கு - அரசு அதிகாரியின் அதிர்ச்சி செயல்., அதிரடி கைது.!