தமிழகம்

"வாழ விடமாட்டாங்க, சேர்ந்து..," கள்ளக்காதல் ஜோடி இரயில் முன் பாய்ந்து விபரீதம்.. உடல் சிதறி பலி..!

Summary:

வாழ விடமாட்டாங்க, சேர்ந்து.., கள்ளக்காதல் ஜோடி இரயில் முன் பாய்ந்து விபரீதம்.. உடல் சிதறி பலி..!

காதலித்து திருமணம் செய்த பெண்மணி, பணியிடத்தில் ஏற்பட்ட காதலால் கள்ளக்காதலனுடன் வாழ எண்ணிய நிலையில், இறுதியில் கள்ளக்காதல் ஜோடி இரயில் முன்பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை, குண்டுபிள்ளையார் கோவில் பகுதியை சார்ந்தவர் முருகேஷ். இவரது மகள் சத்யா (வயது 23). அம்மாபேட்டை நாமமாலை, தெற்கு காலனியை சார்ந்தவர் சதீஷ் குமார். சத்யாவும் - சதீஷ் குமாரும் கடந்த 4 வருடத்திற்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தம்பதிகளுக்கு தற்போது 2 வயதில் அஸ்வின் என்ற குழந்தை உள்ளார். 

சேலம் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த சத்யாவுடன், அம்மாபேட்டை சாணிக்குட்டை தெருவை சார்ந்த இராஜேந்திரன் என்பவரின் மகன் விஷ்ணுவும் (வயது 27) பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் கள்ளக்காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளது. இந்த விஷயம் சதீஷ் குமாருக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, சதீஷ் குமார் தனது மனைவியை கண்டித்து, கள்ளக்காதல் பழக்கத்தை கைவிடுமாறு கேட்டுள்ளார். இந்த தகராறு தொடர்ந்து வந்த நிலையில், அவ்வப்போது அக்கம் பக்கத்தினர் தம்பதிகளை சமாதானம் செய்து வைத்துள்ளனர். ஆனாலும், அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை தீர்ந்தபாடில்லை. தினமும் சண்டை அதிகரித்த காரணத்தால், சத்யா குழந்தையுடன் தாய்வீட்டிற்கு சென்றுள்ளார். விஷ்ணுவுக்கு வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துவைக்க அவரின் பெற்றோரும் ஏற்பாடு செய்துள்ளனர். 

இந்த தகவலை அறிந்த சத்யா கள்ளக்காதலன் விஷ்ணுவிடம் சென்று, "நமது தவறான பழக்கத்தால் எனது வாழ்க்கையே சீரழிந்துவிட்டது, எனது கணவர் தகராறு செய்கிறார். அவருடன் எனக்கு வாழ விருப்பம் இல்லை. நீங்களும் என்னை கைவிட்டுவிடாதீர்கள். என்னை திருமணம் செய்யுங்கள். நாம் எங்காவது என்று வாழலாம்" என்று கூறியுள்ளார். மனம் வருந்திப்போன விஷ்ணுவோ, "நாம் இருவரும் சேர்ந்தே வாழுவோம், விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் உன்னை கரம்பிடிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

கள்ளக்காதல் ஜோடியின் முடிவை அறிந்த சதீஷ்குமார் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, மனமுடைந்துபோன சத்யா விஷ்ணுவிடம், "நம்மை இவர்கள் வாழவிடமாட்டார்கள். பிரித்துவிடுவார்கள். அதனால் தற்கொலை செய்துகொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் குழந்தையை பெற்றோரின் வீட்டில் கொடுத்த சத்யா, விஷ்ணுவுடன் அம்மாபேட்டை மிலிட்டரி சாலைக்கு வருகை தந்துள்ளார்.  

பின்னர், அங்குள்ள குருவாயூரப்பன் கோவில் எதிரே இருக்கும் தண்டவாளம் அருகே தற்கொலை செய்ய காத்திருந்த நிலையில், பாண்டிச்சேரியில் இருந்து யஷ்வந்த்பூர் நோக்கி பயணித்த அதிவிரைவு இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். இதில், விஷ்ணு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். சத்யா தூக்கி வீசப்பட்டு தலை, கை, கால் உடைந்து உயிரிழந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அம்மாபேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து வசியரினை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் ஜோடி இரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முறையற்ற காதலால் இருவர் தற்கொலை செய்துகொள்ள, பெண்ணின் குழந்தை தான் ஆதரிக்க தாய் இன்றி தவித்து வருகிறது. 


Advertisement