வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
டிடிஎப் வாசனுக்கு வரும் கூட்டம் கூட கலைஞருக்கு வரவில்லை - விந்தியா கடுமையான விமர்சனம்.!
சேலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய விந்தியா, "பைக் ஓட்டும் டிடிஎப் வாசன் என்ற பையன் இருக்கிறார். அவர் எந்த ஊருக்கு சென்றாலும், அவரை பார்க்க கூட்டமாக 500, 1000 பேர் வருகிறார்கள். சன்னி லியோன் கடை திறக்க வந்தால் 1,00,000 பேர் வருவார்கள்.
கலைஞர் 100 நிகழ்ச்சிக்கு இலவசமாக வாருங்கள் என பலருக்கும் அழைக்க விடுத்தும் மக்கள் வரவில்லை. கருணாநிதி 100 நிகழ்ச்சிக்கு பின், ஸ்டாலின் வைரமுத்துவிடும் அப்பா குறித்து கவிதை புத்தகம் எழுதி வெளியிடுங்கள் என்று கூறினார்.
வைரமுத்து கருணாநிதி குறித்து பேசினால் எதுகை-மோனை இருக்கும், உண்மை இருக்காது. இவை அனைத்தையும் பார்த்து தாங்கும் உடன் பிறப்புகளை நம்மால் புரிந்துகொள்ளவே இயலாது. 70, 80களில் தமிழ்நாட்டில் ஹிந்தி படங்கள் அதிகம் ரிலீஸ் ஆகியது. இந்த படங்களை மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்ப்பார்கள்.
படத்தில் பேசுபவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியாது எனினும், மக்கள் கைதட்டி ரசிப்பார்கள். அந்நிலைதான் திமுக உடன் பிறப்புகளுக்கும். செந்தில் பாலாஜியை கைது செய்து விடுவோம் என்று கூறியவர்கள், இன்று செந்தில் பாலாஜி கைதுக்கு பின் இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்கிறார்கள்" என பேசினார்.