மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
குழந்தையின் கண்முன்னே தந்தையின் தலையை வெட்டி தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த 3 பேர்.!

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு என்கிற சந்திரமோகன். 45 வயதாகும் சந்துரு அந்த பகுதியில் மிகப்பெரிய ரவுடியாக இருந்துள்ளார். மேலும், நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்ற நிர்வாகியாகவும் உள்ளார்.
இந்நிலையில், சந்த்ரு தனது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் தேவி தியேட்டர் பாலம் அருகே சென்றபோது காரில் வந்த மூன்று பேர் சந்துருவை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதோடு அவரின் தலையை துண்டாக வெட்டியுள்ளனர். பின்னர் தலையை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
படுகொலையின் போது சந்துருவின் கையில் இருந்த குழந்தைக்கு காயம் ஏற்பட்டதால் அந்த குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தன் தந்தையைக் கொன்றதற்கு பழி வாங்கும் வகையில் நண்பர்களுடன் சேர்ந்து கொன்றதாக கொலையாளிகளில் ஒருவன் கூறியுள்ளான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.