தமிழகம் இந்தியா

மீனவர்களின் வலையில் சிக்கிய ராக்கெட்! மீனவர்கள் அதிர்ச்சி!

Summary:

rocket part in fish net


புதுச்சேரி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது வலையில் ஏதோ கடினமான பொருள் சிக்கியிருப்பதை உணர்ந்த அவர் அதுகுறித்து மற்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்து மூன்று படகுகள் இணைந்து அந்த பொருளை கரைக்கு இழுத்து வந்திருக்கின்றனர்.

 இதனையடுத்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அதை சோதனை செய்தனர். 

சோதனையின் போது கரைக்கு கொண்டு வரப்பட்ட அந்த பொருள் ஒரு ராக்கெட்டின் பகுதி என தெரிந்தது. இதனையடுத்து கடலில் கிடைத்த ராக்கெட்டின் பாகம் குறித்து ஆய்வு செய்ய விண்வெளி ஆய்வு மையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதிகாரிகள் வலையில் சிக்கிய ராக்கெட் பாகத்தை ஆய்வு செய்தனர்.அதில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, கடந்த மார்ச் 22ம் தேதி, பூமியை கண்காணிக்க 'RISAT2B' என்ற செயற்கை கோளுடன் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் அல்லது கடந்த ஏப்ரல் 1ம் தேதி எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட்டில் பயன்படுத்திய பி.எஸ்.ஓ.எம். எஸ்.எல். பூஸ்டராக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.


Advertisement