திருப்பூரில் தடையை மீறி சாலையோர ஆக்கிரமிப்பு.. இருவர் கைது.!
திருப்பூர் நஞ்சப்பா பள்ளி சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து பலர் கடைகளை நடத்தி வந்துள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
மேலும் அங்கு இனி வரும் காலத்தில் ஆக்கிரமிப்பு செய்ய கூடாது என்று எச்சரித்துள்ளனர். இதனை தொடர்ந்து சாலையோர கடைகளில் உள்ள பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யாமல் வியிபாரிகளே எடுத்த செல்ல அனுமதி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி இருவர் மீண்டும் அந்த சாலையோர பகுதியை ஆக்கிரமித்து கடையை நடத்தியுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் ஆக்கிரமிப்பு செய்த சுப்ரமணியம் மற்றும் ஜாகிர் உசேன் மீது வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.