தகறாரில் முடிந்த பாதை பிரச்சனை.. போலிஸ் விசாரணை..!

தகறாரில் முடிந்த பாதை பிரச்சனை.. போலிஸ் விசாரணை..!


road-problem-ended-in-dispute-police-investigation

விராலிமலை அருகேயுள்ள மேலபச்சகுடி ஊராட்சி குமரப்பட்டி பகுதியை சேர்ந்த பெரியசாமிக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பாதை பிரச்சினை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் இரு தரப்பினருக்கும் மீண்டும் பாதை பிரச்சினை சமந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் எதிர் தரப்பினர் பெரியசாமி வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் பொது பாதையில் கட்டபடுள்ளதாக சொல்லி டிராக்டர் மூலம் சுவரை இடித்து தள்ளி உள்ளார்கள். அது மட்டுமல்லாமல் ஜன்னல் கண்ணாடிகளையும் நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர்.

Road problem

இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமி  இந்த சம்பவம் குறித்து குமரபட்டியை சேர்ந்த மூக்காயி, லட்சுமி, பிரசாந்த், பிரகாஷ் பிச்சை ஆகியோர் மீது மாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.