
சரக்கு லாரி மீது கார் மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு... கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற போது நிகழ்ந்த சோகம்...
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில்(45). இவர் அதே பகுதியில் மருந்து கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். செந்திலுக்கு பிரகாஷ்(21) என்ற மகனும், சபி பிரபா(18) என்ற மகளும் உள்ள நிலையில் நேற்று குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர்.
காரினை பிரகாஷ் ஓட்டி சென்ற நிலையில் கார் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் மேம்பாலத்தில் முன்னாள் சென்ற சரக்கு லாரி மீது பயங்கரமாக மோதியுள்ளது.இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. விபத்தில் கார் ஓட்டிய பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் செந்தில் உயிரிழந்தார். செந்திலின் மனைவி மற்றும் மகள் இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement