தமிழகம் ஆன்மிகம்

தஞ்சை பெரிய கோவிலின் முக்கிய விவகாரத்தை கையில் எடுத்த இந்து முன்னணி.! பக்தர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பு.!

Summary:

கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கை காரணமாக உலக புக

கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கை காரணமாக உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் கொரனோ பரவல் காரணமாக இன்று அதிகாலை முதல் மூடப்பட்டது. தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று சித்திரைப் பெருவிழா. கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக சித்திரை பெருவிழா நடைபெறவில்லை.

இந்தநிலையில், இந்து முன்னணி தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈசான சிவம் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் கொண்டாடப்படும் சித்திரைப் பெருவிழா கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக நடைபெறவில்லை.‌ எனவே இந்த ஆண்டு பெரிய கோவில் தேர் திருவிழாவை ஆகமவிதிப்படி கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு​ நடத்த வேண்டும்.

தமிழாக்கத்தில் பெரும்பான்மை இந்து மக்களின் வழிபாட்டு உரிமையான தேர்த்திருவிழாவிற்கு மட்டும் தடைவிதிப்பது பெரும்பான்மை மக்களின் மனம் புண்படும் செயலாகவே உள்ளது. இந்த திருவிழாவை நம்பி வாழும் சிற்றுண்டி தயாரிப்பாளர்கள், கைவினை கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் சிரமப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் தேர் திருவிழாவை சமூக இடைவெளியுடன் நடத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement