டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள்.! தமிழகத்தில் கம்பீரமாக வலம் வந்த காட்சிகள்.! அதில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் லிஸ்ட்.!

டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள்.! தமிழகத்தில் கம்பீரமாக வலம் வந்த காட்சிகள்.! அதில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் லிஸ்ட்.!



rejected-tamil-nadu-decorative-vehicle-in-delhi

இந்தியா முழுவதும் இன்று 73 வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில். இன்று தமிழகத்தில் சென்னையில் காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர், வீர தீர செயல் புரிந்தவர்களுக்காக பல்வேறு பதக்கங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இதனையடுத்து தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின நிகழ்வில் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழகத்தில் பங்குபெறும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள், வீரமங்கை வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், மற்றும் திருப்பூர் குமரன் முத்தாராமலிங்கத் தேவர், பெரியார், ராஜாஜி, காமராஜர்,  ராஜாஜி, ரெட்டமலை சீனிவாசன், வ.வே.சு. அய்யர், வாஞ்சி நாதன், தீரன் சின்னமலை, கன்னிய மிகு காயிதே மில்லத், ஜோசப் குமாரப்பா ஆகிய தலைவர்களின் சிலைகளுடன் அலங்கார ஊர்தி என 4 ஊர்திகள் இடம் பெற்றது.

decorative vehicle

கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று பரவல் காரணமாக வெகு சீக்கிரமாகவே 30 நிமிடங்களில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று, காலை கொடியேற்றும் நிகழ்ச்சி முடிந்த பின், மாலை ஆளுநர் மாளிகையில், தேநீர் விருந்து நடைப்பெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தேநீர் விருந்து ஒத்தி வைக்கப்படுவதாகவும் தற்போதுள்ள சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின், தேநீர் விருந்து நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.