பட்டப்பகலில் ரியல்எஸ்டேட் தொழிலதிபர் ஓட ஓட வெட்டிக்கொலை.. நெல்லையில் பரபரப்பு..!Real estate businessman hacked to death in broad daylight.. Sensation in Nella..!

நெல்லை மாவட்டம் மணப்படை வீடு கிராமத்தில் வசித்து வருபவர் சுருளிராஜன். இவர் ரியல் எஸ்டேட், காண்ட்ராக்ட் மற்றும் கார்களை வாங்கி விற்கும் தொழில்களை செய்து வருகிறார். இவர் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்றும் நிலுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் சுருளிராஜன் தனது பாதுகாப்பு கருதி தான் பயணம் செய்யும் காரில் இரும்பு ராடு ஒன்றை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சுருளிராஜன் பாளையின் சட்டக் கல்லூரி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாகனம் ஒன்று அவரது கார் மீது வேகமாக மோதி உள்ளது.

Business man

இதனால் அதிர்ச்சியடைந்த சுருளி ராஜன் தனது கார் மீது என்ன மோதியது என்று பார்ப்பதற்காக காரை விட்டு கீழே இறங்கியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டி உள்ளது. இதில் பதறிப்போன சுருளிராஜன் அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளார். இருப்பினும் அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் சுருளிராஜனின் தலை, கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

இந்த சம்பவத்தில் சுருளிராஜன் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக பலியானார். இதனையடுத்து இச்சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுருளிராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.