கிரிவலத்தில் நடந்த சோகம்; வழிதவறிய பெண் நெஞ்சு வலியால் மரணம்.!



Ranipet Arakonam Woman Dies by Heart Attack 

 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், காந்தி நகரில் வசித்து வருபவர் பழனி. இவரின் மகள் உஷாராணி (வயது 58). கடந்த பிப்.11 அன்று, உறவினர்களுடன் பௌர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலை வந்துள்ளார். 

அப்போது, உஷாராணி உறவினர்களிடம் இருந்து தவறி சென்றுள்ளார். உறவினர்கள்  வழக்கமான கிரிவல பாதையில் பயணித்து வீட்டுக்கு வந்துவிட்டனர். 

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த மகன் முன் கழுத்தில் கத்தியுடன் நின்ற தாய்; பதறவைக்கும் சம்பவம்..!

Ranipet

பெண் பலி

இதனிடையே, வழிதவறி சென்ற உஷாராணி திருவண்ணாமலை - காஞ்சிபுரம் சாலையில் இருக்கும் சிட்கோ பேருந்து நிறுத்த நிறுத்தத்தில் வந்தபோது மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

உஷாராணி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின் இதுதொடர்பாக திருவண்ணாமலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: தந்தையின் கண்முன் மகளுக்கு நேர்ந்த சோகம்; பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பயங்கரம்.!