முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதியளித்த நடிகர் ரஜினிகாந்த்! எவ்வளவு தொகை தெரியுமா??

முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதியளித்த நடிகர் ரஜினிகாந்த்! எவ்வளவு தொகை தெரியுமா??


rajinikanth-donate-50-lakhs-for-corono-refund

தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் கொரோனா அதிதீவிரமாக பரவி நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவ்வாறு அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவை ஏற்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு உதவிகளைச் செய்யலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

rajini

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.50 லட்சம் நிதி வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா எனும் உயிர்க்கொல்லி நோயை ஒழிக்க அரசாங்கம் கொண்டுவந்த கட்டுப்பாடுகளைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். இது பொதுமக்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் எனத் தெரிவித்துள்ளார்.