பரபரப்பான அரசியல் சூழலில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்!
பரபரப்பான அரசியல் சூழலில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்!

கட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடப்போகும் கமல் ஹாசனுக்கு ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக - காங்கிரஸ் கூட்டணி, அதிமுக – பாஜக- பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து முன்னணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், வரும் தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 40 தொகுதியிலும் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது. அதோடு, 39 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து தேர்வு நடைபெறுகிறது என்றும், கமல் ஹாசன் ஒரேயொரு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2ஆவது ஆண்டு தொடக்கவிழா நெல்லையில் நேற்று நடந்தது.
கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்...என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
— Rajinikanth (@rajinikanth) February 24, 2019
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் அவர், "கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்...என் நண்பர் கமல்ஹாசன், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள கமல், ரஜினியின் ஆதரவை பெறும் வகையில், அவருக்கு நன்றி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கமல் ஹாசன் டுவிட்டரில் "நன்றி @rajinikanth, என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே , நாளை நமதே" என தெரிவித்துள்ளார்.
நன்றி @rajinikanth, என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே
— Kamal Haasan (@ikamalhaasan) February 24, 2019
நாளை நமதே.