தமிழகம்

அரசுப்பள்ளியில் 4 மாணவிகள் ஆசிரியர்களால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.! கொடூரத்தின் உச்சம்.!!

Summary:

அரசுப்பள்ளியில் 4 மாணவிகள் ஆசிரியர்களால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.! கொடூரத்தின் உச்சம்.!!

4 பள்ளி மாணவிகள் ஆசிரியர்களால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆழ்வார் மாவட்டம், பிவாடி நகரில் அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் 4 மாணவிகளை, பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

மேலும், சிறுமிகளை மானபங்கம் செய்து ஆசிரியர்களுடன் கொடூரத்தன்மையை காண்பித்து இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளும், அங்குள்ள பிவாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரை ஏற்ற பிவாடி காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி ஜோஷி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அதிகாரிகளின் குழுவும், விசாரணை நடத்த ஆழ்வார் மாவட்டத்திற்கு விரைந்து சென்றுள்ளது.


Advertisement