இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் தனி ராஜ்யமாக தனது சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் தொண்டைமானின் பிறந்த தினம்.!

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் தனி ராஜ்யமாக தனது சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் தொண்டைமானின் பிறந்த தினம்.!


rajagopala-thondaiman-birthday

ஆங்கிலேய ஆட்சி முடிவுக்கு வந்து நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா முழுவதும் பரவி இருந்த சமஸ்தானங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டது . ஆனாலும் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானம் ஆகஸ்ட் 15 அன்று இணைக்கப்படவில்லை.

சுதந்திரம் அடைந்து 7 மாதங்கள் கழித்து தான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் ராஜகோபால  தொண்டைமான் முறைப்படி இந்தியாவோடு தனது சமஸ்தானத்தை இணைத்ததோடு, தனது அரண்மனை கஜானாவில் இருந்த பணம் முழுவதையும் மத்திய அரசிடம் ஒப்படைத்தார் . அதுவரையிலும் புதுக்கோட்டை சமஸ்தானம் தனி ராஜ்யமாக தான் இருந்தது.

thondaimanபுதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ராமச்சந்திர தொண்டைமானின் மகனாக 1922 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி பிறந்தார் ராஜகோபால தொண்டைமான். தனது ஆறாவது வயதில் புதுக்கோட்டை சமஸ்தான மன்னராக பதவி ஏற்றார். சிறுவன் என்பதால் சமஸ்தான நிர்வாகத்தை ஆங்கிலேய அதிகாரி அலெக்சாண்டர் தொடென்ஹாம் கவனித்துக்கொண்டார். தன் 22வது வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றார்.

புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் சரிசமமாக அனுமதிக்கப்பட வேண்டும் என ஆணையிட்டார். தமிழகத்தில் ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னர் என்ற பெருமையை பெற்ற ராஜகோபால தொண்டைமானுக்கு இன்று பிறந்த தினம்.