#Breaking: கனமழை காரணமாக இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி கடலூர் விழுப்புரம், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தஞ்சாவூர் உட்பட 24 மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதேபோல புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று சதய நாளையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.