28 ஆம் தேதி வரை வெளுத்துவாங்க போகும் மழை! எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?!



rain-till-28th-august-in-tamilnadu

16 மாவட்டங்களில் நேற்று லேசான மழை பெய்தது. வேலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, ராணிப்பேட்டையில் மிதமானது முதல் கன மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்தது. 

மேலும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை,  விழுப்புரம், கடலூர்,பெரம்பலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, இன்று முதல் 28ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.