பொதுமக்களை வாட்டி வதைத்த வெயில்.! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி.!

பொதுமக்களை வாட்டி வதைத்த வெயில்.! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி.!


rain in tamilnadu

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் நாளை மறுநாள் திங்கள் கிழமை வரை தென் தமிழகத்திலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 

rain

வட தமிழக மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.