தீவிரமடையும் யாஸ் புயல்...! தமிழகத்தில் 3 நாட்களுக்கு கொட்டி தீர்க்கவிருக்கும் மழை.! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தீவிரமடையும் யாஸ் புயல்...! தமிழகத்தில் 3 நாட்களுக்கு கொட்டி தீர்க்கவிருக்கும் மழை.! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!


rain in tamilnadu

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர புயல் அதிதீவிரமாக வலுப்பெற்றுள்ளது. யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து இன்று கரையைக் கடக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

யாஸ் புயல்  காரணமாக 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

rain

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.