டெல்டா மாவட்டங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மகிழ்ச்சியில் டெல்டா மாவட்ட மக்கள்!

டெல்டா மாவட்டங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மகிழ்ச்சியில் டெல்டா மாவட்ட மக்கள்!


Rain in delta district

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், காரைக்காலில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்சி மலை ஒட்டிய வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

இந்தநிலையில், தமிழகத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதேபோல் சென்னையில், அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.