தமிழகம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?

Summary:

இந்த 9 மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது! சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக செப்டம்பர் 23 இன்று தமிழகத்தில் தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், கடலோர மாவட்டங்களான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Advertisement