அரசியல் தமிழகம்

புதுக்கோட்டை நபர்களுடன் இணைந்து காளான் பிரியாணி செய்த ராகுல் காந்தி.! அவர் தமிழில் பேசிய ஒரு வார்த்தை.!

Summary:

வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள தலைவர் ராகுல்காந்தி காளான் பிரியாணி சமைத்து சாப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் தமிழகம் வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். தமிழக சுற்றுப் பயணத்தின்போது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள தோட்டத்தில் ராகுலுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அங்கு புதுக்கோட்டை மாவட்டம் வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் சமையல் நிகழ்ச்சி சமையல் கலைஞர்கள், காளான் பிரியாணி தயார் செய்துகொண்டிருந்தனர். 

சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழில் பேசி வெங்காய ரைத்தாவை கலக்கி ஒரு வெங்காயத்தை எடுத்து உப்பு சரியாக இருக்கிறதா என்று டேஸ்ட் பார்த்து நானும் சமைப்பேன் என கூறியுள்ளார் ராகுல்காந்தி.  சமையல் பணியில் இருந்தவர்களுடன் சில வார்த்தைகள் தமிழில் உரையாடிய, பின்னர் சமையலில் இறங்கினார் ராகுல்.

பின்னர் சாப்பிட்ட பின் காளான் பிரியாணி சுவையாக இருக்கிறது என பாராட்டினார். தரையில் அமர்ந்து கிராமத்து சமையல் கலைஞர்களுடன் சகஜமாகப் பேசிய ராகுல் அவர்கள் சமைத்த சாப்பாட்டிற்கு நற்சான்றும் அளித்தார். 


Advertisement