தமிழகம்

சுஜித்தின் உடலை வெளியே காட்டாதது ஏன்?!! பரபரப்புக்கு மத்தியில் விளக்கமளித்தார் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்!!

Summary:

radhakrishnan IAS explain about surjith dead

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த குழந்தை சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து ஐந்து நாட்களாக நடைப்பெற்ற மீட்பு பணியானது மக்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த நிலையில் தோல்வியில் முடிவடைந்தது.பின்னர் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சிறுவன் சுஜித்தின் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் அடக்கம் செய்யப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் இறுதிவரை குழந்தையின் முகத்தை கூட யாருக்கும் காட்டப்படவில்லை. இந்நிலையில் சுஜித்தின் உடலை காட்டாதது ஏன்? என பல தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுந்தது. இதனை தொடர்ந்து இதுகுறித்து தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் இன்று விளக்கமளித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். 

அப்பொழுது அவர் ஆழ்துளை கிணற்றில் தூர்நாற்றம் வீசியதை தொடர்ந்து குழந்தை சுஜித்தின் உடல் சிதைந்த நிலையில் வெளியே மீட்டெடுக்கப்பட்டது. மேலும் இறந்தவர்களின் உடலை எவ்வாறு வெளியே எடுக்க வேண்டும் என்பதற்கு விதிமுறைகள் உள்ளது. அதன்படியே குழந்தை சுஜித்தின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. 

மேலும் கும்பகோணம் தீவிபத்தின் போது இறந்த குழந்தைகளின் உடலை வெளியே காட்டியதற்கு  தமிழகம் பெரும் விமர்சனங்களை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட வழிமுறையின் அடிப்படையிலேயே சுஜித் உடல் பொதுப் பார்வைக்கு வைக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

 மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட எங்களுடன் சுஜித்தின்  பெற்றோர்கள் எப்பொழுதும் இருந்துகொண்டே இருந்தனர். மேலும் அவர்களுக்கு அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டு வந்தது எனவும் கூறியுள்ளார்


  


Advertisement