புரெவி புயலின் தற்போதைய நிலை.! வானிலை மையம் வெளியிட்ட தகவல்.!

புரெவி புயலின் தற்போதைய நிலை.! வானிலை மையம் வெளியிட்ட தகவல்.!


puravi strom

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கடந்த வாரம் புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. நிவர் புயலின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட ஏரிகளின் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

நிவர் புயலைத் தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் அந்தப் புயலுக்கு 'புரெவி' புயல் எனப் பெயர் வைக்கப்பட்டது. புரெவி புயல், பாம்பனுக்கு தென்கிழக்கே 530 கி.மீ தொலைவிலும், குமரிக்கு தென்கிழக்கே 700 கி.மீ தொலைவில் தொலைவிலும், இலங்கை திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 

strom

கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து வருகிறது. புரெவி புயல், இலங்கையின் திருகோணமலையில் இன்று கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், புயல் கரையைக் கடக்கும் போது 75- 85 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த புயலானது  நாளை மன்னார் வளைகுடா பகுதியைக் கடந்து, நாளை மறுநாள் டிசம்பர் 4-ஆம் தேதி தென் தமிழகத்தில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே  கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.