கொரோனவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 14 பேருக்கு கமிஷனர் அதிரடி தண்டனை!

கொரோனவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 14 பேருக்கு கமிஷனர் அதிரடி தண்டனை!



Punishment to 14people gundas

கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த பெண் உள்பட 14 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் சைமன். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த மாதம் 19 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் டி.பி.சத்திரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அங்குள்ள மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அண்ணாநகர் கிழக்கு, நியூ ஆவடி சாலை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஏராளமானோர் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் வேலங்காடு கல்லறையில் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.

doctor

அங்கு ஏற்பட்ட வன்முறையில் ஆம்புலன்ஸ் வாகனம் கல்வீசி தாக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையொட்டி அன்னை சத்யா நகரைச் சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 1 பெண் உள்பட 14 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய பெண் உட்பட 14 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.