சென்னையில் விதியை மீறினால் என்ன தண்டனை.? மாநகராட்சி அதிரடி!

சென்னையில் விதியை மீறினால் என்ன தண்டனை.? மாநகராட்சி அதிரடி!



Punishment for against 144

சென்னையில் விதியை மீறினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 சீனாவின் உகான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளில் பரவிய இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

chennai

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தநிலையில், சென்னையில் மிக அதிகமாக பரவ தொடங்கியது. இந்த நிலையில் சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இதனால் தற்போது சென்னையில் விதியை மீறி நடந்தால் ரூ.100 அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல் சென்னையில் பொதுமுடக்க காலத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்த அவர், தனி மனித இடைவெளி இருநபர்களிடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.